கதையை மனதில் என்னும் போது, முதலில் நினைவுக்கு வருவது என்னவோ.. இது பில்லாவின் கதை (அஜீத் அவர்களுக்கோ! இல்லை ரஜினி அவர்களுக்கான கதையோ அல்ல!).
ஒரு 14வயது சிறுவன், எப்படி ஒரு சாதாரண வாழ்க்கையில் இருந்து அசாதாரண வாழ்க்கையினுள் இட்டு செல்லப்படுகிறான் என்பதே பில்லாவின் தொடர்ச்சியாக இருக்க முடியும். அதையே நாம் வரும் கதையில் காணப்போகிறோம். திரைப்பட வடிவிலேயே கூறினால் இன்னும் சுவையாக இருக்கும். எனவே அப்படியே காண்போம்.
பில்லா 2:
14 வயது இளைஞன் / மாணவன் கல்வியில் இயல்பாகவே திறன் அதிகம் (தாயிடம் இருந்து வந்தது). அதிலும் தமக்கு எது அவசியம் என்பதிலும் கருத்தாய் இருப்பவன்.
அவன் தாயாரின்(பெயர்: தழள்) சிறிது பழைய வாழ்க்கை. கருப்பு வெள்ளை நிறத்தில் - ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி - தந்தை படிக்க கல்விக்கூடம் அனுப்புகிறார் - தாயாருக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை - தழள் படிப்பில் சுட்டி - அதிலும் பிரித்து அறிதலில் தழள் கைத்தேர்ந்தவள் - ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் தந்தை இறக்க - தாயுடன் அறிக்கையில் இருந்தார் - இருந்தாலும் அன்றைய தமிழ் இதழ்கள் நாளிதழ்கள் படித்தார் - பல முறை தழளின் தாயார் அந்த புத்தகங்களை கிழிப்பதுண்டு - மாமாவிற்கு மணமுடித்து வைத்தார்கள் - மாமா (பெயர்: நிதின்) சிறிது சுயநலம் கொண்டவர். தமக்கு வேண்டியவற்றில் கருத்தாய் நிற்பவர். - இதனால் தழளின் படிப்பு ஆர்வம் எல்லையை கடக்கும் போது இவரே அதை நிறுத்திவிட்டார்.
பில்லா சிறந்த படிக்கும் அறிவும்,தனித்து அறிந்து புரிந்துகொள்ளும் திறமையும் கொண்டவன். எனினும் அவனுக்கு படிப்பில் அத்தனை ஆர்வம் இல்லை தன் தாய் என்ன மதிப்பெண் பெற ஆமோதித்தாரோ அதையே பெற்றான்.
அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் (பில்லா) இருக்கும் அதே தெருவில் இருக்கும் நண்பன். இவர்கள் இருவரும் பள்ளி முடிந்தவுடன் பெரும்பாலும் சேர்ந்தே இருப்பார்கள்.
எட்டாம் வகுப்பு தொடங்கும் போது ஃபில் (நண்பனின் பெயர்) உடைய தந்தை இறந்துவிட்டார். அதனால் அவன் படிப்பை விட வேண்டிவந்தது. அதன் பின்னர் அவன் கிடைத்த இடங்களில் வேலை செய்தான்.
தவறான நண்பர்களின் தொடர்பு கிடைத்தது, அதன்பின் அவனைப் பற்றி பெரிதாக தகவல்கள் பில்லாவிற்கு கிடைக்கவில்லை.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு விபத்தில் அவனுடைய தாய் மற்றும் தந்தை இறந்துபோயினர். பில்லா தணித்துவிடப்பட்டான் அவனை அவனுடைய தந்தையின் தங்கை வீட்டில் இருக்கப் பணிந்தார்கள். சிறிது காலம் கழிந்தது.
(பில்லா தந்தை மற்றும் தாயை கொண்டவர்களை பலி தீர்த்து கைதாகிறான்)
அப்போது தான் தவறவிட்ட நண்பன் (ஃபில்) திரும்பி வந்தான்.
(ஃபில், பில்லாவை காவல்துறையிடம் இருந்து மீட்டுதல்)
பின்பு ஃபில், பில்லாவிடம் தனக்கு சிறிது உதவிகள் தேவைப்படுவதாகவும், தன்னுடன் வந்து பார்க்கவும் பணிந்தான்.
பில்லாவின் சித்த பிரம்மையான வாழ்க்கையில் இருந்து சிறிது விடுபட, அவன் ஃபில் உதவி செய்ய முன்வந்தான்.
ஃபில் சிறிது திடகாத்திரமான தேகம் கொண்டவன், அதனாலேயே அவன் செல்வது பல நேரங்களில் அவன் இருக்கும் இடத்தில் சட்டமாகும்.
அதனால் எவரும் பில்லா தங்களின் ஒருவனாக மாறுவதில் ஆட்சேபனை செய்யவில்லை.
பில்லாவிற்கு கொடுக்கப்பட்ட முதல் வேலை.
... To be continued.
Comments
Post a Comment