கதையை மனதில் என்னும் போது, முதலில் நினைவுக்கு வருவது என்னவோ.. இது பில்லாவின் கதை (அஜீத் அவர்களுக்கோ! இல்லை ரஜினி அவர்களுக்கான கதையோ அல்ல!). ஒரு 14வயது சிறுவன், எப்படி ஒரு சாதாரண வாழ்க்கையில் இருந்து அசாதாரண வாழ்க்கையினுள் இட்டு செல்லப்படுகிறான் என்பதே பில்லாவின் தொடர்ச்சியாக இருக்க முடியும். அதையே நாம் வரும் கதையில் காணப்போகிறோம். திரைப்பட வடிவிலேயே கூறினால் இன்னும் சுவையாக இருக்கும். எனவே அப்படியே காண்போம். பில்லா 2: 14 வயது இளைஞன் / மாணவன் கல்வியில் இயல்பாகவே திறன் அதிகம் (தாயிடம் இருந்து வந்தது). அதிலும் தமக்கு எது அவசியம் என்பதிலும் கருத்தாய் இருப்பவன். அவன் தாயாரின்(பெயர்: தழள்) சிறிது பழைய வாழ்க்கை. கருப்பு வெள்ளை நிறத்தில் - ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி - தந்தை படிக்க கல்விக்கூடம் அனுப்புகிறார் - தாயாருக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை - தழள் படிப்பில் சுட்டி - அதிலும் பிரித்து அறிதலில் தழள் கைத்தேர்ந்தவள் - ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் தந்தை இறக்க - தாயுடன் அறிக்கையில் இருந்தார் - இருந்தாலும் அன்றைய தமிழ் இதழ்கள் நாளிதழ்கள் படித்தார் - பல முறை தழளின் தாயார் அந்த ப...